இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை

Ippadithan Irukka Venum Pombala Song Lyrics in Tamil

TMS: இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
இங்கிலீஷ் படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை

PS: உங்க சொற்படியே நடந்துக்கிறேன் சொல்லுங்க
நான் எப்படி எப்படி இருக்கணுமோ
அப்படி அப்படி மாத்துங்க
சொற்படியே நடந்துக்கிறேன் சொல்லுங்க

TMS: இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை

TMS: மானம் பார்த்த விவசாயிங்க நாடு அல்லவோ
இங்கு மானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ ஒஒ
அதுக்கு இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை

TMS: உடலழகை ஊர் மெச்சக் காட்டக் கூடாது
மேலே உடுப்புகளை இடுப்பு தெரிய மாட்டக் கூடாது
உடலழகை ஊர் மெச்சக் காட்டக் கூடாது
மேலே உடுப்புகளை இடுப்பு தெரிய மாட்டக் கூடாது
உதட்டு மேலே சிவப்பு சாயம் தீட்டக் கூடாது
ஏர் உழவருக்கு ஏற்ற பண்பை மாற்றக் கூடாது

PS: நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும் போது
கொஞ்சம் நாமளுந்தான் மாறிக்கிட்டா அதிலே தப்பேது
நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும் போது
கொஞ்சம் நாமளுந்தான் மாறிக்கிட்டா அதிலே தப்பேது

TMS: இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை

TMS: பூ முடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா
இப்போ பொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
பூ முடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா
இப்போ பொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
கழுதை தேஞ்சி கட்டெறும்பாச்சி நாட்டிலே
பெண்கள் காரியத்தை ஆம்பளை பாக்கிறான் வீட்டிலே

PS: எல்லாரோடு என்னையும் சேர்க்கக் கூடாது
வேலை எது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது
எல்லாரோடு என்னையும் சேர்க்கக் கூடாது
வேலை எது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது

TMS: களை எடுக்கணும் விளைய வைக்கணும்!
கதிர் முத்தினா வயல் அறுக்கணும்
கட்டும் சுமக்கணும் களமும் சேர்க்கணும்
காத்தைப் பாத்து தூத்தி விடணும்
கால நேரம் கடந்திடாம நாலா வேலையும் நாமே பார்க்கணும்

TMS: அதுக்கு இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை
இங்கிலீஷ் படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை

PS: நான் எப்படி எப்படி இருக்கணுமே
அப்படி அப்படி மாத்துங்க
சொற்படியே நடந்துகிறேன் சொல்லுங்க

TMS: இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை

Lyrics in English

Ippadithaan Iruka Venum Pombala
English'U Padichaalum Inbathamizh Naatule
Ippadithaan Iruka Venum Pombala
Unga Sorpadiye Nadandhukuren Sollunga

Naan Eppadi Eppadi Irukanumo
Appadi Appadi Maathunga
Sorpadiye Nadandhukuren Sollunga
Ippadithaan Iruka Venum Pombala

Vaanam Paartha Vivasayeenga Naadu Allavo
Ingu Maanam Naanam Pengaluku Aadai Allavo
Adhuku Ippadithaan Iruka Venum Pombala

Udal Azhagai Ooru Mecha Kaatakoodaadhu
Mele Udupugalai Idupu Theriya Maatakoodaadhu
Udal Azhagai Ooru Mecha Kaatakoodaadhu
Mele Udupugalai Idupu Theriya Maatakoodaadhu

Udhatu Mele Sivapu Saayam Theetakoodaadhu
Yer Uzhavaruku Yetra Panbai Maatrakoodaadhu
Naalukunaal Naagarigam Maaridumbodhu
Konjam Naamalundhaan Maarikitaa Adhile Thappedhu

Naalukunaal Naagarigam Maaridumbodhu
Konjam Naamalundhaan Maarikitaa Adhile Thappedhu

Ippadithaan Iruka Venum Pombala Oho..Ho..Aa..

Poo Mudinja Koondhal Pazhaiya Neelam Irukudhaa
Ipo Ponmbalainga Ellaathukum Puruvam Irukudhaa
Poo Mudinja Koondhal Pazhaiya Neelam Irukudhaa
Ipo Ponmbalainga Ellaathukum Puruvam Irukudhaa

Kazhudha Thenji Katterumbaachi Naatile
Pengal Kaariyathai Aambala Paakiraan Veetile
Ellaarodu Ennaiyum Serka Koodaadhu
Velai Edhu Koduthaalum Seiven Thappaadhu

Ellaarodu Ennaiyum Serka Koodaadhu
Velai Edhu Koduthaalum Seiven Thappaadhu
Sollunga

Kalai Edukanum Vilaiya Vekkanum
Kadhira Muthinaa Vayal Arukanum
Kattum Sumakanum Kalamum Serkanum
Kaatha Paathu Thoothi Vidanum

Kaala Neram Kadandhidaama Naalaa Velaiyum
Naame Paarkanum

Adhuku Ippadithaan Iruka Venum Pombala
English'U Padichaalum Inbathamizh Naatule
Ippadithaan Iruka Venum Pombala
Unga Sorpadiye Nadandhukuren Sollunga

Naan Eppadi Eppadi Irukanumo
Appadi Appadi Maathunga
Sorpadiye Nadandhukuren Sollunga
Ippadithaan Iruka Venum Pombala.