🌻"குலதெய்வம்" என்றால் என்ன என்பதை சுருக்கமாக கூற வேண்டுமென்றால், 🌻
நீங்கள் நினைக்கின்றபடி சக்தி வாய்ந்த முருகன், கணபதியோ, சிவனே, பெருமாளோ, அனைவருக்கும்
குலதெய்வமாக ஆகிவிட மாட்டார்கள்.
அப்படியிருக்க, உங்களின் குலதெய்வம் யாரென்று தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆவல் இருக்கும்.
ஊரிலே இருக்கின்ற கருப்பு. சின்னக்கருப்பு, பெரிய கருப்பு, சின்ன ஆண்டவர், பெரியாண்டவர், மதுரைவீரன், காட்டேரி, முனீஸ்வரன், சுடலைமாடசாமி போன்ற தெய்வங்களை கிராமத்தில் வழிவழியாக உங்களின் முன்னோர்களால் வழிபடக்கூடிய தெய்வங்களே குல தெய்வங்களாகும்.
யாரோ ஒருவர் உங்களுக்கு செய்வினை செய்து விடுகிறார்கள் என்றால், சூன்யம் வைத்து என்றால், இந்தக் குலதெய்வத்தின் அருளாசி இல்லாமல் அதை இவர்கள் வைக்க இயலாது, பெரியபெரிய தெய்வங்கள் கூட உங்கள் வீட்டிற்கு வருகை தரும் பொழுது, இந்தக் குலதெய்வம் குறுக்கே நின்றால், அந்த தெய்வங்கள் கூட உத்தரவு வாங்கித்தான் உள்ளே செல்ல வேண்டும்.
அப்பொழுது, அதன் சக்தியை எண்ணிப்பாருங்கள்.
நமக்கு வருகின்ற கஷ்டங்கள் அனைத்தும் கிரகங்களின் மூலமாக வந்து விடுகின்றதா? என்றால் இல்லை, பித்ருக்களின் மூலமாக வந்துவிடுகிறதா? அதுவும் இல்லை , குலதெய்வத்தின் மூலமாக வந்து விடுகின்றதா என்றால் அதையும் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
பின்பு, எதற்காக இந்த பரிகாரம் என்று கேட்கத் தோன்றும், வரும் கஷ்டங்கள் கிரகத்தினாலும் வருகிறது, பித்ருக்களினாலும் வருகிறது.
குலதெய்வத்தினாலும் வருகிறது.
அப்படியென்றால், குலதெய்வத்தைக் கண்டுபிடிக்க ஜாதகத்தில் வழி இருக்கின்றதா? என்றால் வழி இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்:
லக்கனத்திலிருந்து எண்ணிவர 5வது இடத்திலே ஆண் தெய்வமாக இருந்தால் அவர்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வம் லக்கனத்திலிருந்து -எண்ணிவர அது பெண் தெய்வமாக இருந்தால் குலதெய்வம் பெண் தெய்வம் அந்த 5வது இடத்தில்) ஆணுக்குரிய கிரகமும், பெண்ணுக்குரிய கிரகமும் இருந்தால் அவர்களுக்கு ஆண் தெய்வமும், பெண் தெய்வமும் குலதெய்வமாக இருக்கிறது.
இப்படி கண்டுபிடிக்க இயலாதவர்கள் வருந்தவோ, வாடவோ வேண்டாம் தங்களுக்கு குலதெய்வமே இல்லையென்று கருதி விட வேண்டாம்.
அவர்களுக்கெல்லாம் குலதெய்வம் தெரியவில்லையென்றால், குலதெய்வ வழிபாடு அவர்களுடைய வழக்கிலே இல்லையென்றாலோ, கடைபிடிக்கவில்லையென்றாலோ கவலைப்பட வேண்டாம்.
குலதெய்வமாக காஞ்சி காமாட்சியை" வணங்க வேண்டும் அல்லது "தேனி மாவட்டத்திலுள்ளவர்கள் "மூங்கிலணை காமாட்சி' என்ற ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் இருக்கின்றது. அதை அவர்கள் வணங்கலாம். பெண் தெய்வம் தெரியாதவர்கள், திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்கலாம், இப்பொழுது அன்பர்களுக்கு சந்தேகம் கூட வரலாம்.
இந்த தெய்வங்களை வணங்குவதால், உங்களுடைய வேண்டுகோள் குலதெய்வத்திற்குச் சென்று சேருமா? எங்களுடைய குலதெய்வ சாபம் தீருமா? ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் குலதெய்வம் என்பது ஏறத்தாழ மனிதனின் குணாதிசயங்களைப் பெற்ற சிறுதெய்வங்களே, நம் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கின்றது என்றால், அதில் கலந்துகொள்ளும் அன்பர்கள் அனைவரும் வந்து விட மாட்டார்கள். |
அது போல்தான் நாம் வணங்கும் பொழுது குலதெய்வங்கள் வருவதும், கிராமத்திலே குலதெய்வத்தை வணங்கி வந்தார்கள், யாரென்றால் நம் முன்னோர்கள், நம் மூத்தவர்கள், அப்படிப்பட்ட குலதெய்வங்களுக்கு கட்டளை இடுகின்ற சக்தி குலதெய்வங்களின் குணமறிந்த கடவுள்களான திருச்செந்தூர் முருகன், காஞ்சி காமாட்சி ஆகியோர் கொடுக்கும் பலன்களையும், கட்டளைகளையும் அவர்கள் ஏற்கிறார்கள், ஏற்று நமக்கு நன்மையை செய்கிறார்கள், திடீரென்று ஏற்படும் விபத்து, அல்லது ஆபத்து, நஷ்டம், கஷ்டம் இவையனைத்திற்கும் காரணம் குலதெய்வங்களின் சீற்றமேயாகும். பெரிய தெய்வங்கள் தண்டனை அளிக்கும் நிலையில் குலதெய்வங்கள் தண்டனை அளிக்கும்.
எனவே, அன்பர்களே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், என்னுடைய அறியாமையை மன்னித்து என் குடும்பத்தை காப்பாற்ற அருள் புரியுமாறு செய்ய வேண்டும், என்று மனப்பூர்வமாக வேண்ட நிச்சயமாக குலதெய்வத்தின் அருளாசி உங்களுக்கு கிடைக்கும்.
🙏வாழ்க வளமுடன் 🙏
🌻என்றும் இறைபணியில்
ஸ்ரீ மஞ்சமலை கோவில் நண்பர்கள்
G.சண்முகவேல்
அலங்காநல்லூர்😍