ஒளவையார் அருளிவிட்டுப் போனது!
வீரபாகு எப்படி முருகனின் முதல் - தலையான பக்தனோ, அதுபோல விநாயகப் பெருமானின் தலையான பக்தை ஒளவையார். விநாயகப் பெருமானைப் போற்றி அந்த மூதாட்டி எத்தனை பாடல்களைப் புனைந்திருந்தாலும், அவற்றில் முதன்மையானது விநாயகர் அகவல்.
அது மந்திரசித்தி பெற்றது. தினமும் அதைப் பாராயணம் செய்து
விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்பவர்களுக்கு, சகல காரியங்களும் சித்தியடையும். நிறைவேறும். துன்பங்கள் விலகும். மனதில் மகிழ்ச்சியுண்டாகும். அனைவரும் பாராயணம் செய்து பயன் பெறுங்கள்.
இன்று விநாயக சதுர்த்தி.
இன்றையப் பதிவு விநாயகப் பெருமானுக்கு சமர்ப்பணம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
நீங்கள் விநாயகரை வனங்கினால் போதும். தனியாக மாமலராளை (லெட்சுமி தேவியை) வணங்க வேண்டாம். விநாயகப் பெருமானே லெட்சுமியின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவாள். அதை வலியுறுத்துவதுதான்
‘மாமலாராள் நோக்குண்டாம்’ என்னும் சொற்பதங்கள்
2
ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!
விநாயகப் பெருமானை எப்போதும் நமது புத்தியில் வைத்து வணங்க வேண்டும். நல்ல புத்தியைக் கொடுப்பார். நம்மை வழிதவறிப் போக விடமாட்டார். நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே
உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை…..
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
(இதன் பொருள்) ஐந்து கைகளையும், யானை முகத்தையும், இளம்பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத் தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக் கொழுந்தாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் போற்றுகின்றேன்.
(அருஞ்சொல்)
இந்து – சந்திரன்.
எயிறு – தந்தம்.
நந்தி-சிவபெருமான்.
புந்தி – மனம்.
(விளக்கம்) நான்கு கைகளுடன் தும்பிக்கையையும் விநாயகன் பெற்றிருத்தலின், ஐந்து கரத்தன் எனப்பட்டான். தந்தம் வளைந்து இருப்பதால் பிறைச்சந்திரன் போன்ற தந்தம் எனப்பட்டது. பிறைச்சந்திரன் வடிவம் வளைவுடையது. விநாயகர் என்பார் பிரணவ வடிவினர் ஆவர்.
எயிறு என்பது பல், கொம்பு மற்றும் தந்தம் என்று பொருள்படும்.
தந்தம் என்ற வடமொழிச் சொல்லின் மறுவலே *Dental* என்ற ஆங்கிலச் சொல்.
ஆனால் இங்கே குழந்தைகளுக்கு பொருள் சொல்லும்
போது *சந்திரனின் பிறை போன்ற பற்களைக்* கொண்டவர் என்று நேரடி பொருள்
கொள்ளாமல் அல்லது சொல்லாமல் *சந்திரனின் பிறை போன்ற தந்தங்களைக் கொண்டவர்
என்றோ அல்லது சந்திரனின் பிறை போன்ற கொம்புகளைக் கொண்டவர்* என்று சொல்வது
பொருத்தமாக இருக்கும்.
எயிறு என்பதற்கு பல் என்று நேரடி பொருள் கொள்வதும் தவறில்லை.http://classroom2007.blogspot.com/2010/09/blog-post_11.html?m=1http://madhuramanamadurai.blogspot.com/2015/11/avvaiyaar-paadalkal.html?m=1