திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்

 கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
    
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
    
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
    
யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமங்ற சொன்னவரை நினையாம
    
னினைந்துபவத் தொடக்கை வெல்வாம்

 

 http://www.tamilvu.org/slet/l41d0/l41d0sn1.jsp?x=14