கைவாய் கதிர்வேல் முருகன்

 


பாடல் 14 - கைவாய் கதிர்வேல்


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
   றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
      மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
         ஐவாய் வழி செல்லும் அவாவினையே!

......... சொற்பிரிவு .........

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
   உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
      மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
         ஐவாய் வழி செல்லும் அவாவினையே!

......... பதவுரை .........

மனமே! ஒளிபொருந்திய வேலாயுதத்தை ஏந்திய திருமுருகப்பெருமானின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடைந்து முக்தியைப் பெறுவாயாக! உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்பொறிகள் வழியாக உண்டாகும் ஆசைகளை உறுதியாக விட்டுவிடுவாயாக!