நட்பாராய்தல் - Testing friendship

 


நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
Than testless friendship nought is worse
For contacts formed will scarcely cease.        791

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.
Friendship made without frequent test
Shall end in grief and death at last.        792

குணனுங் குடிமையும் குற்றமுங் குன்றா
வினனு மறிந்தியாக்க நட்பு.
Temper, descent, defects and kins
Trace well and take companions.        793

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு.
Take as good friend at any price
The nobly born who shun disgrace.        794

அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.
Who make you weep and chide wrong trends
And lead you right are worthy friends.        795

கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.
Is there a test like misfortune
A rod to measure out kinsmen?        796

ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.
Keep off contacts with fools; that is
The greatest gain so say the wise.        797

உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ணாற்றறுப்பார் நட்பு.
Off with thoughts that depress the heart
Off with friends that in woe depart.        798

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
யுள்ளினு முள்ளஞ் சுடும்.
Friends who betray at ruin's brink
Burn our mind ev'n at death to think.        799

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீந்தும்
ஒருவுக வொப்பிலார் நட்பு.
The blameless ones as friends embarace;
Give something and give up the base.        800