வினைத்திட்பம் - Powerful acts

 


வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
A powerful mind does powerful act
And all the rest are imperfect.        661

ஊறொராவ் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
Shun failing fuss; fail not purpose
These two are maxims of the wise.        662

கடைகொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
The strong achieve and then display
Woe unto work displayed midway.        663

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
Easy it is to tell a fact
But hard it is to know and act.        664

வீறெய்தி மாண்டார் வினைதிட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
Dynamic deeds of a doughty soul
Shall win the praise of king and all.        665

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
The will-to-do achieves the deed
When mind that wills is strong indeed.        666

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
Scorn not the form: for men there are
Like linchpin of big rolling car.        667

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.
Waver not; do wakefully
The deed resolved purposefully.        668

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
Do with firm will though pains beset
The deed that brings delight at last.        669

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
The world merits no other strength
But strength of will-to-do at length.        670