அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
What bolt can bar true love in fact
The trickling tears reveal the heart. 71
அன்பிலார் எல்லாந் தமக்குரியர்: அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
To selves belong the loveless ones;
To oth'rs the loving e'en to bones. 72
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு
Soul is encased in frame of bone
To taste the life of love alone. 73
அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
Love yields aspiration and thence
Friendship springs up in excellence. 74
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு
The crowning joy of home life flows
From peaceful psychic love always. 75
அறத்திற்கே அன்புசார்பு யென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
"Love is virtue's friend" say know-nots
It helps us against evil plots. 76
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை அறம்
Justice burns the loveless form
Like solar blaze the boneless worm. 77
அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
Life bereft of love is gloom
Can sapless tree in desert bloom? 78
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
Love is the heart which limbs must move,
Or vain the outer parts will prove. 79
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
The seat of life is love alone;
Or beings are but skin and bone! 80