சித்தர் இடைக்காடர்

 தாயின் அடிமைத் தளையை நீக்க அமிர்த்தைக் கொண்டுவர கருடன் பறந்த போது ஏற்பட்ட காற்றினால் கிரகங்களே இடம் மாறிச் சென்றுவிட்டன என்பது வரலாற்று சுவடிகள்
பூலோகத்தில் மழை பொய்த்து விட்ட நிலையில் கிரகங்களை மாற்றி வைத்தார் ஒரு சித்தர், தொண்டை நாட்டில் பொதிகை மலைச்சாரலில் உள்ள இடைக்காடு என்ற ஊரில் இடையர் ஆடு மாடுகளை நேசித்து வளர்த்து வந்தார், ஊர்மக்கள் அவரை இடைக்காடர் என்று அழைத்து வந்தனர், மலைப்பகுதியில் இடைக்காடர் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டு இருந்த போது கந்தல் உடை கலைந்த தலைமுடியோடு எதையும் எதிர்பார்க்காத மனதை உடையவர் ஒருவர் அங்கே வந்தார், அவரை வரவேற்ற இடைக்காடர் தான் வைத்திருந்த உணவை கொடுத்து பசியாறக் கூறினார், ஜீவன் என்ற பசுவின் மடியில் இருந்து பாலைக் கறந்து கொடுத்து பருகச் சொன்னார், அவர் யார் என்று அறியாமலேயே அவரை நன்கு உபசரித்தார், அவர் சாதாரண மனிதரல்ல, சித்தர்களில் முதன்மையானவர், 
தனக்கு செய்த தொண்டால் மகிழ்ந்த அந்த சித்தர் இடைகாடருக்கு ஞான உபதேசம் செய்தார், இடைக்காடர் ஞான உபதேசம் பெற்று சித்தரானார், அவரை மக்கள் இடைக்காட்டு சித்தர் என அழைக்கலானர், சித்தர் ஆன பின் அவர் மனதில் நடக்கப்போகும் நிகழ்வுகள் தெரிந்தன. அந்த நாட்டில் பன்னிரண்டு ஆண்டு காலம் மழை பெய்யாமல் பஞ்சம் தலை விரித்தாடியது,மக்களும் கால்நடைகளும் அழிவார்கள் என்பதை அவர்மனது அவருக்கு முன்கூட்டியேகூறியது, அதை உணர்ந்த சித்தர், தன்னுடைய ஆடுகளுக்கு எருக்கிலை கொடுத்து பழக்கினார், எருக்லை குருவரகு என்ற தானியத்தை சேற்றோடு குழைத்து தன் குடிசையின் சுவற்றை உடைத்து விட்டு புதிய சுவர் எழுப்பினார், எருக்கிலை குருவரகு சேற்றுக் கலலையால் எழுப்பட்ட சுவர் உறுதியாக நின்றது. சித்தரின் மனதில் தோன்றியபடியே அந்த நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நீடித்தது, அதனால் மனிதர்களும் கால்நடைகளும் அழிய தொடங்கின. பூமியில் வெடிப்புகள் பாளங்கள் தோன்றின, ஆனால் சித்தருக்கோ அவரது ஆடுகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது, அவருடைய ஆடுகள் எருக்கிலையும் குருவரகு தானியத்தையும் சேற்றில்குழைத்து சுவர் எழுப்பி இருந்த சுவரில் எங்கும் மேய்ச்சலுக்கு செல்லமுடியாத ஆடுகள் அந்த சுவரில் உடம்பைத் தேய்த்து அப்போது சுவரிலிருந்து சிதறும் தானியங்களை அவரும் அவராது கால்நடைகளும் உண்டு பசியாறின. இந்த அதிசயத்தை காண நவக்கிரக நாயகர்கள் வந்தனர், அவர்களுக்கு ஆட்டுப்பாலில் குருவரகை பாகம் செய்து விருந்து கொடுத்தார், அதைச் சாப்பிட்டவுடன் நவக்கிர நாயகர்கள் மயங்கி உறங்க தொடங்கினர், அவர்கள் இடம் மாறி இருந்ததால்தானே மழை பொய்த்தது, பஞ்சத்தால் நாட்டைத் துடிக்க வைத்துக் கொண்டு இருக்கும் கிரகங்கள் இவர்கள் தானே மழை பெய்வதற்கு எப்படி கிரகங்கள் இருக்க வேண்டுமோ அவ்வாறு அக் கிரகங்களை அமைத்தார், கிரகங்கள் சரியான இடத்தில் அமைந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது, நவக்கிரக நாயகர்கள் வழித்தெழுந்தனர், சித்தர்கள் எதையும் சாதிக்க முடியும் என்று மழை பொய்த்து இருந்த நாட்டில் மழை பொழிய வைத்து நாட்டினை செழிக்க வைத்தார் இடைக்காடர் என்ற சித்தர். 
இடைக்காட்டு சித்தர் திருவண்ணாமலையில் ஐயக்கியமானர், என வரலாறு கூறுகிறது. நவக்கரகங்களில் புதன் பகவானின் அம்சமாக இருப்பவர் என்று அறியப்படுகிறது, இதனால் அவரை புதன் கிழமை வணங்கினால் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது
தென்னாடுடைய சிவனே போற்றி!
ஒம் நமசிவாய நம!
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.