'வள்ளுவரும் குறளும்'- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழருக்குத் தமிழில் தொடர் ஆண்டுகுறையை உணர்ந்த தமிழ் அறிஞர்கள்,சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது என்றும் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்றும் முடிவு செய்தார்கள். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தைமுதல் நாள். புதன், சனி தவிர மற்ற கிழமைகள் வழக்கில்உள்ளவை. புதன் - அறிவன், சனி - காரி. திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடுஅரசு ஏற்று 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுநாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும்1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்துஅலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழர்கள் தம்வாழ்வில், வழக்கில் பின்பற்றியும் பரப்பியும்வருகிறார்கள். '
Great wowwww do did done
ReplyDelete