முருகன், குமரன் - (நாம மகிமை) முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய் பொரு புங்கவரும், புவியும் பரவும் குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. ......... பதவுரை ......... பொரு புங்கவரும் ... போர் புரிவதில் விருப்பமுள்ள தேவர்களும், புவியும் பரவும் ... பூவுலகத்தவரும் புகழ்ந்து துதிக்கின்ற, குரு புங்கவ ... குரு சிரேஷ்டனே, எண் குண பஞ்சரனே ... அருங் குணங்கள் எட்டிற்கும் உறைவிடமானவனே, முருகன், குமரன், குகன் என மொழிந்து ... முருகன், குமரன், குகன் என உனது திரு நாமங்களை மெய்யன்புடன் புகழ்ந்து கூறி, உருகும் செயல் தந்து ... உள்ளம் கசிந்து உருகும் தன்மையைத் தந்து, உணர்வு என்று அருள்வாய் ... மெய்யுணர்வை எப்போது அடியேனுக்கு தந்து அருள் புரிவாய். ......... பொழிப்புரை ......... சண்டையில் ஈடுபடும் வானோரும் மண் உலகத்தவரும் வணங்கித் துதிக்கின்ற ஆச்சார்ய சிரேஷ்டனே, எட்டு குணங்களையே தனது திரு உருவமாகக் கொண்டவனே, முருகன், குமரன், குகன் என்று நெஞ்சு கசிந்து மொழிந்து உருகி உணரும் அறிவை எப்போது கொடுத்தருளப்போகிறாய்? ......... விளக்கவுரை .........